பிரபல தமிழ் நடிகையின் சாகச யோகா; வைரலாகும் வீடியோ.!
actor - adha sharma - yoga - vairal video
சமீபகாலமாக திரை நட்சத்திரங்கள் தங்கள் உடல் வாகை மிடுக்காக வைத்துக்கொள்ள ஜிம்மில் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக நடிகைகளின் ஜிம் வொர்க் அவுட் வீடியோ காட்சிகள் தான் அதிகம் வலம் வருகிறது.
அந்த வகையில் நடிகை அடா ஷர்மா தனது வீட்டின் மொட்டை மாடியில், அருகில் இருக்கும் மரத்தில் கயிற்றைக் கட்டி அதில் தொங்கியபடி யோகா செய்யும் சாகச வீடியோ காட்சிகளை பதிவிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் தற்சமயம் பிசியாக நடித்து வருபவர் அடா சர்மா. அவர் நடிக்கும் படங்களில் கவர்ச்சி சற்று தூக்கலாக தான் இருக்கும் அதற்கேற்ப தனது உடல்வாகை மெருகேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். இவர் கடைசியாக பிரபுதேவா கூட ‘சார்லி சாப்ளின்2’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில் ‘கமாண்டோ 3’ மற்றும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.