ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில் நடிகர் ஆதி செய்த வேலையை பார்த்தீர்களா! வைரலாகும் கியூட் வீடியோ!
Actor aadhi haircut to his father

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து கோரதாண்டவமாடி வருகிறது. இத்தகைய கொரோனா வைரஸை கட்டுபடுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது ஐந்தாவது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தபாடில்லை.
இந்நிலையில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் நடிகர் நடிகைகள் அனைவரும் தங்களது குடும்பங்களுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றது. மேலும் பலர் புகைப்படங்களை வெளியிடுவது, டிக்டாக் வீடியோக்களை வெளியிடுவது என பிஸியாக உள்ளனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஆதி கொரோனாவால் வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில், அவரது தந்தைக்கு முடிவெட்டி, ஷேவிங் செய்து அழகு பார்த்துள்ளார். மேலும் அதற்காக பணத்தை அவரே தந்தையின் பர்ஸிலிருந்து எடுத்துகொள்கிறார். இந்த குறும்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.