"உங்களையும், குடும்பத்தையும் பாருங்க, சண்டை போடாதீங்க" - தல அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை.!
உங்களையும், குடும்பத்தையும் பாருங்க, சண்டை போடாதீங்க - தல அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை.!
தமிழ் சினிமாவில் அல்டிமேட் சூப்பர்ஸ்டாராக வலம்வரும் நடிகர் அஜித் குமார், விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை படக்குழு மேற்கொண்டுள்ளது. இதனிடையே, நடிகர் அஜித்குமார், துபாயில் நடைபெறும் சர்வதேச அளவிலான கார் பந்தயத்தில் கலந்துகொள்கிறார். துபாயில் அவர் பயிற்சியும் மேற்கொள்கிறார்.
நேரத்தை வீணடிக்காதீங்க
இந்நிலையில், துபாயில் இருந்து "ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. நிறைய ரசிகர்கள் நேரில் வந்திருந்தார்கள். அது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. நான் சொல்லப்போவது ஒன்றுதான். நீங்கள் அனைவரும் சந்தோசமாக, ஆரோக்கியமாக, மனநிம்மதியுடன் வாழ கடவுளை வேண்டுகிறேன். குடும்பத்தை பாருங்கள், நேரத்தை வீணாக செலவழிக்க வேண்டாம்.
இதையும் படிங்க: திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சண்டை போடாதீங்க
நன்றாக படியுங்கள், வேளைக்கு செல்வார்கள் கடுமையாக உழையுங்கள். நமக்கு பிடித்த விஷயத்தில் ஈடுபாடுடன் வேலை பார்த்து வெற்றி அடையுங்கள். வெற்றி அடைந்தால் நல்ல விஷயம், தோல்வி அடைந்தால் சோர்ந்துவிடவேண்டாம். அர்ப்பணிப்புடன் உழையுங்கள். உங்களின் அன்புக்கு நன்றி. நானும் உலகை நேசிக்கிறேன். சண்டை போடாதீங்க. வாழ்க்கை மிகவும் குறுகியது. சந்தோசமாக இருங்கள். உங்களின் நலனையும், குடும்பத்தின் நலனையும் பாருங்கள்" என பேசியுள்ளார்.
இதையும் படிங்க: "எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?