முதல் முறையாக வெளியான நடிகர் ஆனந்தராஜின் மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படம்!
Actor anandharaj family photo
தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் வில்லனாக நடித்தவர் வில்லன் நடிகர் ஆனந்தராஜ். 1987 ஆம் ஆண்டு தாய் மேல் ஆணை என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ஆனந்தராஜ். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமாகிவிட்டார் ஆனந்தராஜ்.
இவர் வில்லனாக நடித்த பெரும்பாலனான திரைப்படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில், சரத்குமார் நடிப்பில் வெளியான சூர்யவம்சம் திரைப்படம், அர்ஜுன் நடிப்பில் வெளியான ஏழுமலை, சிம்மராசி இதுபோன்று எத்தனையோ படங்களில் வில்லனாக மட்டும் இல்லாமல் குணசித்ர நடிகராகவும் நடித்து தமிழ் சினிமாவையே மிரட்டியுள்ளார் நடிகர் ஆனந்தராஜ்.
தற்போது காமெடி கலந்த வில்லனாக நடிப்பதுடன் தன்னை முழுநேர அரசியலிலும் ஈடுபடுத்தியுள்ளார் ஆனந்தராஜ். கடைசியாக சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார் ஆனந்தராஜ்.
இந்நிலையில் ரசிகர்கள் அதிகம் பார்த்திராத நடிகர் ஆனந்தராஜின் அழகிய குடும்பத்தின் புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.