மாதவனுக்கு அடுத்து சாக்லேட் பாயாக வலம்வந்த சுவீட் நடிகர் ஆர்யாவின் பிறந்தநாள் இன்று..!
மாதவனுக்கு அடுத்து சாக்லேட் பாயாக வலம்வந்த சுவீட் நடிகர் ஆர்யாவின் பிறந்தநாள் இன்று..!
ஜம்ஷட் சேதிராகத் என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் ஆர்யா, கடந்த 1980 டிசம்பர் 11 ஆம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு அருகேயுள்ள கிராமத்தில் பிறந்தார். இவர் கடந்த 2019 ஆம் வருடம் நடிகை சாயிஷாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது 1 குழந்தையும் உள்ளது.
கேரளாவில் பிறந்து, தனது இளம்பருவம் மற்றும் இளமைக்கல்வியை சென்னையில் பயின்ற ஆர்யா, பின்னாளில் திரைத்துறை மீது மோகம் ஏற்பட்டு திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். திரைத்துறையில் மாதவனுக்கு அடுத்தபடியாக, சாக்லேட் பாயாக வலம்வந்த ஆர்யா, பல திரைப்பட நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
இதனாலேயே அவரது திருமண வாழ்க்கை வெகுவாக கடந்து சென்ற நிலையில், 39 வயதில் தன்னுடன் திரைப்படத்தில் நடித்த நடிகை சாயிஷாவை திருமணம் செய்துகொண்டார். தம்பதிகள் இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இருவரும் தங்களது இல்லறத்தில் இடைவெளியை ஏற்படுத்தாமல் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.
கடந்த 2005 ஆம் வருடத்தில் வெளியான அறிந்தும் அறியாமலும் திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகுக்கு நாயகனாக அறிமுகமான ஆர்யா, பட்டியல், வட்டாரம், நான் கடவுள், ஓரம் போ, மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், வேட்டை, ராஜா ராணி, ஆரம்பம், இரண்டாம் உலகம், மீகாமன், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, பெங்களூர் நாட்கள் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
பல்வேறு தமிழ் திரைப்படங்களில் கெஸ்ட் அப்பியரன்ஸும் கொடுத்துள்ளார். இறுதியாக ஆர்யாவின் நடிப்பில் வெளியான காப்பான், சற்பட்டா பரம்பரை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அரண்மனை 3 எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்காத நிலையில், எனிமி திரைப்படம் சாதாரண வெற்றியை அடைந்தது.