சூர்யாவுக்கு நன்றி சொன்ன ஆர்யா.. சாதனை நாயகனுக்கு சாதித்த நாயகன் வாழ்த்து..!
சூர்யாவுக்கு நன்றி சொன்ன ஆர்யா.. சாதனை நாயகனுக்கு சாதித்த நாயகன் வாழ்த்து..!
கோலிவுட்டில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான "அறிந்தும் அறியாமலும்" படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. இவர் அதன்பின் தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் இறுதியாக நடித்த டெடி மற்றும் சார்பட்டா பரம்பரை படம் மாபெரும் வெற்றியளித்ததை தொடர்ந்து, தற்போது "கேப்டன்" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ஆர்யா - சக்தி சௌந்தர்ராஜன், டெடி படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து செயல்படுவதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஹரிஷ் உத்தமன், சிம்ரன், காவியா ஷெட்டி போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
இப்படம் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஆர்யா நடிப்பு மட்டுமின்றி, சைக்கிளிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் லண்டனில் நடைபெறவுள்ள சைக்கிள் போட்டியில் தனது குழுவினரிடம் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில் ஆர்யா சைக்கிளிங் அணியின் ஜெர்சியை நடிகர் சூர்யா சமீபத்தில் வெளியிட்டார். இதற்கு ஆர்யா தனது சமூக வலைத்தளபக்கத்தில் நன்றி தெரிவித்து, இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
நடிகர் சூர்யா மற்றும் ஆர்யா இருவரும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வார்கள் என்பது தெரிந்த விஷயமே. அந்தவகையில் தற்போது ஆர்யா எடுத்துள்ள சைக்கிளிங் முயற்சிக்கு சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.