இனி நீ ஆம்பள நாட்டுகட்டை மட்டும் இல்லை... விஜய் சேதுபதியை விமர்சனம் செய்த பிரபல நடிகர்.! எதற்காக தெரியுமா?
actor ashok kumar proud about vijay sethupathi
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான விஜய் சேதுபதி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.மேலும் பல முன்னணி நடிகர்களை விடவும் விஜய் சேதுபதிக்கு தற்போது ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.
பல வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் கலக்கும் விஜய்சேதுபதி நடித்து சமீபத்தில் வெளிவந்த 96 படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த படத்தில் வரும் த்ரிஷா விஜய் சேதுபதியை பார்த்து 'நீ ஆம்பள நாட்டுக்கட்டை' என சொல்லும் ரசிகர்களிடையே அதிகம் பிரபலமடைந்துவிட்டது.
இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள மற்றொரு படமான சூப்பர் டிலக்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. அதில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் உள்ளார்.
இதற்கு நடிகர் அசோக் செல்வன் " காத்திருக்க முடியவில்லை, அண்ணா இனி நீங்க பொம்பள நாட்டுக்கட்டையும் கூட" எனவிமர்சனம் செய்துள்ளார்.
மேலும் ரசிகர்களும் இதற்கு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.