விஷாலுக்கு வில்லனாகும் பிரபல மலையாள முன்னணி நடிகர்! யார்னு தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தற்போது
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தற்போது புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இது விஷாலின் 31வது திரைப்படம் ஆகும். இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடித்து வருகிறார்.
இப்படத்தை விஷாலின் சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். மேலும் கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஷாலின் 31-வது திரைப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியானது.
இந்த நிலையில் இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் இதற்கு முன்பு தமிழில் அஜீத் நடிப்பில் வெளிவந்த ஜனா மற்றும் விக்ரமின் ஸ்கெட்ச் படங்களில் நடித்திருந்தார். மேலும் மலையாளத்தில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.