தவெக மாநாடை மறைமுகமாக சுட்டிக்காட்டி, சூர்யாவை அரசியலுக்கு அழைத்த நடிகர்; கங்குவா இசை வெளியீடு விழாவில் அதிர்ந்த அரங்கம்.!
தவெக மாநாடை மறைமுகமாக சுட்டிக்காட்டி, சூர்யாவை அரசியலுக்கு அழைத்த நடிகர்; கங்குவா இசை வெளியீடு விழாவில் அதிர்ந்த அரங்கம்.!
தலைவன் அவனது ரசிகர்களை முட்டாளாக வைத்திருக்க கூடாது. அவனை படிக்க வைக்க வேண்டும், சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என போஸ் வெங்கட் பேசினார் .
2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக வைத்து களமிறங்கி இருக்கும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் வாயிலாக தேர்தலை எதிர்கொள்கிறார். இதற்கான முதல் அரசியல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்ரவாண்டியில் நடைபெறுகிறது. விஜயின் அரசியல் பிரவேசம் தொடர்ந்து ஆதரவு, எதிர்ப்பு என இருந்து வருகிறது. நாளை அவரின் கட்சியில் யார் இணையப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளளது.
போஸ் வெங்கட் பேச்சு
இந்நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கங்குவா இசை வெளியீட்டு விழாவில் காலனித்துக்கொண்ட நடிகர் போஸ் வெங்கட், மறைமுகமாக விஜயின் அரசியல் பிரவேசத்தை சுட்டிக்காட்டி, சூர்யாவையும் அரசியலுக்கு அழைத்தார். அதற்கான விதிமுறைகளாக தனது கருத்துக்கள் சிலவற்றையும் அவர் முன்வைத்தார். இந்த விஷயம் குறித்து போஸ் வெங்கட் பேசுகையில்,
இதையும் படிங்க: #Breaking: த.வெ.க முதல் மாநாடு: "இராணுவ கட்டுப்பாடு" - விஜய் பரபரப்பு அறிக்கை... கொண்டாட்டத்தில் தொண்டர்கள்.!
ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு சொல்லிக்கொடுங்கள்
"ஏன் இந்த இடத்தில் அரசியல் பேசக்கூடாது என்பது ஒரு சிறிய ஆசை. ஒரு சூப்பர்ஸ்டார், நடிகர், ரசிகர்களை வழிநடத்த வேண்டும். எப்படி வழிநடத்தவேண்டும் என்றால், உங்களைப்போல வழிநடத்த வேண்டும். தர்மம் செய்ய, உதவி செய்ய, மக்களுடைய பிரச்சனையை கவனிக்க, நீங்கள் வாழ்வதையும் சொல்லிக்கொடுக்க வேண்டும், இப்போதே சொல்லிகொடுத்திட வேண்டும். எல்லாத்தையும் மீறி உங்களுக்கு அறிவு, படிப்பை கொடுக்க வேண்டும். அதன்பின் அரசியலுக்கு வரவேண்டும்.
தலைவன் ரசிகர்களை முட்டாளாக வைத்திருக்க கூடாது
ஒரு தலைவன் என்ன வேலை செய்கிறான் என்பது முக்கியம் இல்லை. தலைவன் என்பவன் எழுத்தாளராக, பேச்சாளராக, நடிகராக, மருத்துவராக, ஐஏஎஸ் என யாராகவும் இருக்கலாம். தலைவனின் அடித்தளம் என்பது அவனது ரசிகர்களை முட்டாளாக வைத்திருக்க கூடாது. அவனை அறிவாளியாக வைத்திருக்க வேண்டும். அவனை படிக்க வைக்க வேண்டும், அறிவை வளர்க்க உதவ வேண்டும், அதன்பின் அரசியலுக்கு வர வேண்டும், அப்படி பார்த்தல் நீங்கள் (சூர்யா) அரசியலுக்கு வர வேண்டும். நிறைய நடித்து, திருப்தியான படங்களை கொடுத்து, நீங்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்" என பேசினார்.
போஸ் வெங்கட்டின் பேச்சு நேரடியாக சூர்யாவை பிற்காலத்தில் அரசியலுக்கு அழைத்து இருக்கிறது. அவரின் பேச்சை கேட்ட சூர்யாவின் ரசிகர்களும் அரங்கம் அதிர குரல் எழுப்பினர். சூர்யா அவரின் பேச்சை மட்டும் கவனித்தபடி இருந்தார். முகத்தில் எந்த மாற்றத்தையும் கொடுக்கவில்லை. நடிகர் போஸ் வெங்கட் தீவிர திமுக விசுவாசி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #Breaking: த.வெ.க முதல் மாநாடு: "இராணுவ கட்டுப்பாடு" - விஜய் பரபரப்பு அறிக்கை... கொண்டாட்டத்தில் தொண்டர்கள்.!