ஒரே நாளில் வீட்டில் அடுத்தடுத்ததாக நேர்ந்த 2 மரணங்கள்.! சோகத்தில் நிலைகுலைந்த நடிகர் போஸ் வெங்கட்டின் குடும்பத்தினர்!!
ஒரே நாளில் வீட்டில் அடுத்தடுத்ததாக நேர்ந்த 2 மரணங்கள்.! சோகத்தில் நிலைகுலைந்த நடிகர் போஸ் வெங்கட்டின் குடும்பத்தினர்!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டான மெட்டி ஒலி தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் போஸ் வெங்கட். மேலும் அவர் தொடர்ந்து பல தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பரீட்சயமான நடிகர்களுள் ஒருவராக இருந்தார்.
அவர் வெள்ளித்திரையிலும் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், வில்லனாகவும் மிரட்டலாக நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அவர் கடந்த 2020ம் ஆண்டு வெளிவந்த கன்னிமாடம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் போஸ் வெங்கட் குடும்பத்தில் அடுத்தடுத்ததாக தொடர்ந்து இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி நேற்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். தகவலறிந்து அவரது இறுதி சடங்கிற்கு வந்த
போஸ் வெங்கட்டின் சகோதரர் ரங்கநாதன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். போஸ் வெங்கட்டின் சகோதரியின் உடல் நேற்று சென்னையில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் அவரது சகோதரர் உடல் சொந்த ஊரான அறந்தாங்கிக்கு எடுத்து செல்லப்பட்டு இன்று இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.