×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜயின் கோட் படத்தை பார்க்க, 'ஆடு'டன் வந்து அலப்பறை செய்த கூல் சுரேஷ்; ரசிகர்கள் உற்சாகம்.!

விஜயின் கோட் படத்தை பார்க்க, 'ஆடு'டன் வந்து அலப்பறை செய்த கூல் சுரேஷ்; ரசிகர்கள் உற்சாகம்.!

Advertisement

நடிகர்கள் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, யோகிபாபு, மோகன், ஜெயராம், லைலா, சினேகா, வைபவ், பிரேம்ஜி, ஜெயராம், விடிவி கணேஷ், பார்வதி நாயர் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் கோட் (The Greatest of All Time GOAT). இப்படம் செப்டம்பர் 05ம் தேதியான இன்று உலகளவில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் வெளியானது. 

கேரளாவில் 500 க்கும் அதிகமான திரையரங்குகளில் கோட் திரைப்படம் வெளியானது. நேற்று இரவு முதலாகவே ஆட்டம், பாட்டம், என திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டு இருந்தது. பல முன்னணி பிரபலங்களும் படத்தை திரையரங்கில் நேரில் சென்று கண்டுகளித்தனர்.

கூல் சுரேஷ் அட்ராசிட்டி

இந்நிலையில், கோட் திரைப்படம் பார்க்க சென்னையில் உள்ள கோயம்பேடு ரோஹினி திரையரங்கம் வந்த நடிகர் கூல் சுரேஷ், தன்னுடன் ஆடு ஒன்றையும் அழைத்து வந்து அலப்பறையில் ஈடுபட்டார். உற்சாக மிகுதியில் இருந்த ரசிகர்களை, "ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா" என பாட்டுப்பாடி உற்சாகப்படுத்தினார். 

இதையும் படிங்க: கோட் திரைப்படத்தை பார்க்க வந்த சிவகார்த்திகேயன்; வைப் ஆகும் ரசிகர்கள்.!

தொடர்ந்து அவரை ரசிகர்களும் உற்சாகப்படுத்திய நிலையில், ஒருகட்டத்தில் கூட்ட நெரிசலால் ஆட்டுக்கும் - கூல் சுரேஷுக்கும் தண்ணீர் தாகமும் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் கொடுத்து இருவரின் தாகத்தையும் தீர்த்து வைத்தனர். 

அதேபோல, கேசினோ திரையரங்கில் அணில் ஒன்று திடீரென திரையரங்குக்குள் புகுந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

இதையும் படிங்க: கோட் படக்குழுவை வாழ்த்திய தல அஜித்; வெங்கட் பிரபு மகிழ்ச்சி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #goat #Cool Suresh
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story