#Breaking: விவாகரத்தை கைவிட்டு மீண்டும் இணைந்த தனுஷ் - ஐஸ்வர்யா.. ரஜினிகாந்த் வீட்டில் நடந்த சமரச பேச்சுவார்த்தை..!
#Breaking: விவாகரத்தை கைவிட்டு மீண்டும் இணைந்த தனுஷ் - ஐஸ்வர்யா.. ரஜினிகாந்த் வீட்டில் நடந்த சமரச பேச்சுவார்த்தை..!
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக இருந்தவர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா. 17 ஆண்டுகள் ஒன்றாக இருந்த இவர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்களது பிரிவினை அறிவித்திருந்தது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இவர்களின் உறவினர்கள், ரசிகர்கள் கூறியும் கேட்காத இருவரும் தங்களது வாழ்க்கைக்கு பிரிவே சரியானது என்று புரிந்துகொண்டு இம்முடிவை எடுத்திருந்தனர். இதன்பின் இருவரும் அவரவர் வேலையை செய்து வந்தனர. இந்நிலையில் ரஜினிகாந்தின் வீட்டில் இருகுடும்பத்தினரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதில் சுமூகமான முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.