அம்மாடியோவ்.. டிவிட்டரில் மாபெரும் சாதனை புரிந்த நடிகர் தனுஷ்.. என்னன்னு தெரியுமா?..! கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!!
அம்மாடியோவ்.. டிவிட்டரில் மாபெரும் சாதனை புரிந்த நடிகர் தனுஷ்.. என்னன்னு தெரியுமா?..! கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் தனுஷ். இவர் வேறு எந்த தமிழ் நடிகர்களுக்கும் ட்விட்டரில் பின்தொடர்பாளர்கள் இல்லாத அளவிற்கு 1 கோடியே 10 லட்சம் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளார். இதனை தனுஷ் ரசிகர்கள் சாதனையாக கொண்டாடி வருகின்றனர்.
தனுஷ் ஷமிதாப், ராஞ்சனா, அந்த்ராங்கி ரே போன்ற ஹிந்தி படங்களில் நடித்து, வட இந்தியாவிலும் அதிக ரசிகர்களை சேர்த்துள்ள நிலையில், தி கிரே மேன் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார். இதன்பின் தான் அவருக்கு ட்விட்டரில் பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கை மலமலவென உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த வருடம் நடிகர் தனுஷுக்கு 1 கோடி பின்தொடர்பாளர்கள் இருந்த நிலையில், புதிதாக மேலும் 10 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தை நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கும் வாத்தி என்ற படத்திலும் தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.