தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கன்பார்மான லவ்.. கௌதம் கார்த்திக்கு விரைவில் திருமணம்.. பொண்ணு யாருன்னு தெரியுமா?..!!

கன்பார்மான லவ்.. கௌதம் கார்த்திக்கு விரைவில் திருமணம்.. பொண்ணு யாருன்னு தெரியுமா?..!!

Actor Gowtham Karthick marriage coming soon Advertisement

காதல் எப்படி வரும்? எதனால் வரும்? என்பது யாருக்கும் தெரியாது. பலரும் தங்களின் வாழ்நாட்களில் காதலில் சிக்கி மிகப்பெரிய சர்ச்சையை சந்திக்கின்றனர். அதுபோல தேவராட்டம் படத்தில் நடித்த கௌதம் கார்த்திக் காதலிப்பதாக பல தகவல்கள் வெளியாகிறது. 

நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் கடல் திரைப்படம் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். தொடக்கத்தில் இவருக்கு அந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்த படங்கள் இவருக்கு ஒரு அடையாளத்தை பெற்று தந்தது. 

Actor Gowtham Karthick

இவர் நடிப்பில் வெளியான ஆனந்தம் விளையாடும் வீடு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இவரும், தேவராட்டம் படத்தில் நாயகியாக நடித்த மஞ்சிமா மோகனும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி நிலையில், இருவரின் திருமணமும் விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்த சமயத்தில் இவர்கள் இருவரும் ஜோடியாக நிச்சயதார்த்த விழாவிற்கு சென்று வந்த போட்டோ வெளியாகி உள்ளது. கௌதம் கார்த்தியின் நண்பர் கோபியின் நிச்சயதார்த்த விழாவில் இருவரும் கலந்து கொண்டுள்ளனர். விரைவில் இவர்களின் திருமண தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actor Gowtham Karthick #manjima mohan #கௌதம் கார்த்திக் #சினிமா #மஞ்சிமா மோகன் #திருமணம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story