நடிகர் விஜய்தான் என்னுடைய இந்த நிலைமைக்கு காரணம்! நடிகர் ஜெய் கூறிய தகவல்!
Actor jai talks about actor vijay
சென்னை 28 படம் மூலம் ஒரு ஹீரோவாக அவதாரம் எடுத்து, இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ என்று சொல்லும் அளவிற்கு பிரபலமாக உள்ளார் நடிகை ஜெய். இவர் தளபதி விஜய் நடித்த பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்தார் ஜெய். பகவதி படம் சினிமா துறையில் ஜெய்க்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
பகவதி படத்தை தொடர்ந்து சென்னை 28 படத்தில் நடித்த ஹீரோக்களில் ஒருவராக நடித்தார் ஜெய். சென்னை 28 படத்தை அடுத்த சிறு சிறு வேடங்களில் நடிக்க ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று தேடினாராம் நடிகர் ஜெய். இந்நிலையில் தற்போது இது பற்றி பேசியுள்ள ஜெய், தளபதி விஜய் அளித்த ஒரு அறிவுரை தான் தன்னை ஹீரோவாக்கியது என தெரிவித்துள்ளார்.
சிறு சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்த என்னை, விஜய் அழைத்து இப்படி துணை கதாபாத்திரங்கள் மட்டுமே பண்ணிக்கிட்டு இருந்தா உன்னை கடைசிவரை அந்த மாதிரிதான் வெச்சிருப்பாங்க" என கூறியுள்ளார். இதனால்தான் நான் சிறு வேடங்களில் நடிப்பதை விட்டுவிட்டு பெரிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்ததாக ஜெய் தெரிவித்துள்ளார்.