கோவை ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு ரூ.16 இலட்சத்தில் மகேந்திரா Marazzo கார் பரிசு; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கோவை ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு ரூ.16 இலட்சத்தில் மகேந்திரா Marazzo கார் பரிசு; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த பெண் தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா, திடீரென பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, நடிகர் கமல் ஹாசன் ஷர்மிளாவை நேரில் அழைத்து பேசினார்.
பின்னர், அவருக்கு கார் ஒன்றை வழங்குவதாகவும், அதனை வைத்து சுயதொழில் செய்து முன்னேறிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. கமல் பண்பாட்டு மையத்தின் சார்பில் கார் வாங்கிக்கொடுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. கமல் ஷர்மிளாவுக்கு கார் வாங்கி கொடுப்பது சர்ச்சையையும் சந்தித்தது.
இந்த நிலையில், ஷர்மிளாவுக்கு நடிகர் கமல் ஹாசன் ரூ.16 இலட்சம் மதிப்புள்ள மகேந்திரா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான Mahindra Marazzo காரை பரிசாக அளிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று முடிந்துள்ளன. விரைவில் கார் ஷர்மிளா வசம் ஒப்படைக்கப்படும். கார் வாடகைக்கு இயக்கப்படும் வகையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.