"ஜப்பான் அந்த மாதிரி படம் அல்ல" நடிகர் கார்த்தி மனம் திறந்த பேட்டி.?
ஜப்பான் அந்த மாதிரி படம் அல்ல நடிகர் கார்த்தி மனம் திறந்த பேட்டி.?
கார்த்தி, அனு இம்மானுவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் "ஜப்பான்". தீபாவளியை ஒட்டி வெளியாகவுள்ள இப்படத்தை ராஜு முருகன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ஜோக்கர், குக்கூ என பொதுநலன் சார்ந்த விஷயங்களைக் கொண்ட படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி அளித்த பேட்டியில், " இந்தப் படத்தின் கதை கேட்கும்போது இப்படி ஒருவனை இந்த சமுதாயம் உருவாக்கியுள்ளதா என்று ஆச்சர்யமாக இருந்தது. இந்த கேரக்டரில் எப்படி நான் நடிக்க முடியும் என்று தான் தோன்றியது. ஆனால் நடை, உடை எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு நடித்தேன்.
17 வருடங்களில் 25 படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். நான் பல படங்களை ஒப்புக்கொண்டு நடித்திருக்கலாம். ஆனால் மக்களுக்கு நம்மை பிடிக்க வைக்க முடியாது. நாம் இயல்பாக இருப்பதைப் பார்த்து அவர்களுக்கே பிடிக்கவேண்டும்.
"ஜப்பான்" திரைப்படம் வழக்கமான மசாலா திரைப்படமாக இருக்காது. ராஜு முருகன் மாதிரியான இலக்கிய வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் தாங்கள் சொல்ல நினைப்பதை இந்த மாதிரி பொழுதுபோக்கு திரைப்படங்கள் மூலம் சொல்லலாம் என்று நினைத்த போது தான் இந்தப்படம் உருவானது" என்று கார்த்தி கூறியுள்ளார்.