தனது மகனுக்கு கடவுளின் பெயரை வைத்து அசத்திய நடிகர் கார்த்தி..! என்ன பெயர் தெரியுமா..?
தனது மகனுக்கு தமிழ் கடவுளின் பெயரை வைத்து மகிழ்ந்துள்ளார் பிரபல நடிகர் கார்த்தி.
தனது மகனுக்கு தமிழ் கடவுளின் பெயரை வைத்து மகிழ்ந்துள்ளார் பிரபல நடிகர் கார்த்தி.
தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. பருத்திவீரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான இவர் இன்று ஏகப்பட்ட வெற்றிப்படங்களை கொடுத்து புகழின் உச்சத்தில் உள்ளார். இவர் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, பிரபல நடிகர் சிவகுமாரின் மகன் மற்றும் நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார்.
தற்போது சுல்தான் படத்தில் மிகவும் பிசியாக நடித்துவரும் இவர், சமீபத்தில் தங்களுக்கு ஆண்குழந்தை பிறந்திருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கார்த்தி தனது மகனுக்கு "கந்தன்" என பெயர் வைத்திருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கண்ணா,
அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்.
அன்புடன்...
அப்பா." என பதிவு செய்துள்ளார்.
கந்தன் என்று தமிழ்க் கடவுளின் பெயரை தனது மகனுக்கு வைத்துள்ள நடிகர் கார்த்திக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.