குறும்புக்காரரு.. அண்ணன் சூர்யாவை இப்படிதான் வெறுப்பேத்துவேன்! சீக்ரெட்டை பகிர்ந்த நடிகர் கார்த்தி!!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்த சிவகுமாரின் இளைய மகனான கா
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்த சிவகுமாரின் இளைய மகனான கார்த்தி பருத்திவீரன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் சினிமாதுறையில் களமிறங்கினார். அவர் நடித்த முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தை தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில் கார்த்தி பையா, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி எனப் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் கார்த்திக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் அவர் தற்போது ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 2 ம் தேதி ரிலீசாக உள்ளது. அதனைத் தொடர்ந்து கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் வரலாற்று சிறப்புமிக்க பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் கார்த்தி அவ்வப்போது தனது சிறுவயதில் நடந்த சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொள்வார். இந்நிலையில் அவர் தற்போது தனது அண்ணனான நடிகர் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து,
எனது அண்ணனை வெறுப்பேற்ற ஒரே வழி, அவர் அணிந்திருக்கும் சட்டையை போலவே நானும் அணிந்து கொள்வேன். மீண்டும் அப்படி செய்ய ஆசையாக இருக்கிறது. நீங்களும் உங்கள் சகோதரர்களுடன் இப்படி ஒரே மாதிரியான உடையணிந்தது உண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.