டெல்டா விவசாயிகளுக்காக நடிகர் கொட்டாச்சியின் மகள் வெளியிட்ட சிறப்பான வீடியோ!
Actor kottachi daughter manasvi video for delta farmers
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் இமைக்கா நொடிகள். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது இந்த திரைப்படம். படத்தில் நயன்தாராவிற்கு மகளாக நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் நடித்திருப்பார். இவரது பெயர் மானஸ்வி. இவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் முதலில் பிரபலமானது இமைக்கா நொடிகள் படம் மூலம் அல்ல. இவர் முதலில் பிரபலமானது ஜல்லிக்கட்டு போராட்டத்தில்தான். ஆம், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவர் வெளியிட்ட வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதன்பிறகுதான் தெரியும் இவர் நடிகர் கொட்டாச்சியின் மகள் என்பது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தற்போது கஜாவால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு அனைவரும் உதவும்படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மானஸ்வி. அந்த வீடியோவில் அரசும் மக்களும் பல்வேறு உதவிகளையும் நிவாரண பொருட்களையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வருகின்றனர். ஆனால், இன்னும் பல இடங்களுக்கு சரியான நிவாரண உதவி கிடைக்கவில்லை. எனவே உதவி கிடைக்காத அனைவர்க்கும் உதவும்படி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.