×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் மகேஷ் பாபு வீட்டில் நேர்ந்த திடீர் மரணம்! பேரதிர்ச்சியில் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல்!!

நடிகர் மகேஷ் பாபுவின் வீட்டில் நேர்ந்த திடீர் மரணம்! பேரதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம்!!

Advertisement

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு உடல்நலக்குறைவால்  திடீரென காலமான தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு.  இவர் 1987 ஆம் ஆண்டு வெளியான சாம்ராட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் நடிப்பதிலிருந்து விலகிய அவர் கிருஷ்ணா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் ரமேஷ் பாபு நீண்ட காலமாக கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த ரமேஷ் பாபு திடீரென காலமாகியுள்ளார். அவரது மறைவு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#mahesh babu #brother #dead
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story