50 ஆண்டுகளை நிறைவுசெய்த அல்லூரி சீதாராம ராஜு திரைப்படம்; நெகிழ்ச்சி கருத்தை பகிர்ந்த மகேஷ் பாபு.!
50 ஆண்டுகளை நிறைவுசெய்த அல்லூரி சீதாராம ராஜு திரைப்படம்; நெகிழ்ச்சி கருத்தை பகிர்ந்த மகேஷ் பாபு.!
கடந்த 1974ம் ஆண்டு கிருஷ்ணா, விஜய நிர்மலா, சந்திர மோகன், ஜாகையா, பந்தாரி ஸ்ரீ, ராவ் கோபால் ராவ் உட்பட பலர் நடிக்க வெளியான திரைப்படம் அல்லூரி சீதாராம ராஜு (Alluri Seetarama Raju).
ராமச்சந்திர ராவ் இயக்கத்தில், ஆதி நாராயணராவ் இசையில் வெளியாகி தெலுங்கில் மெகாஹிட் மற்றும் பிளாக்பஸ்டர் திரைப்படமான அல்லூரிக்கு, இன்று வரை தனிப்பெரும் ரசிகர் கூட்டமே இருக்கிறது. காலத்தால் அழியாத பல காவியங்களில் அல்லூரி திரைப்படமும் இடம்பெற்றது.
சுதந்திர போராட்ட தியாகியாக அல்லூரி சீதாராம ராஜுவின் வாழ்க்கையை மையப்படுத்தி வெளியான இப்படம், இன்று வரை தெலுங்கு மாநிலங்களில் மிகப்பெரிய விஷயமாக கவனிக்கப்படுகிறது. இன்றுடன் அப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவுபெற்றது.
இதனை முன்னிட்டு பலரும் தங்களின் கருத்துக்களை முன்வைத்த நிலையில், தெலுங்கு சூப்பர்ஸ்டாராக வருணிக்கப்படும் மகேஷ் பாபு, தனது எக்ஸ் பக்கத்தில், "அல்லூரி சீதாராம ராஜு படத்தை முதல் முறையாக பார்த்த சமயத்தில், நன்னாவின் திரைபிரசன்னத்தை கண்டு வியந்தது இன்றும் நினைவில் இருக்கிறது.
இப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன. நடிகராக எனது திரையுலக பயணத்திலும், தெலுங்கு திரை வாழ்க்கையிலும் அவை ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன" என கூறியுள்ளார்.