#Breaking: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகானுக்கு நீதிமன்ற காவல்; அதிரடி உத்தரவு.!
#Breaking: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகானுக்கு நீதிமன்ற காவல்; அதிரடி உத்தரவு.!
சென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட நபரை கைது செய்து நடந்த விசாரணையில், நடிகர் மன்சூர் அலிகான், அவரின் நண்பர்கள் 7 பேர் ஆகியோரும் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் 2 நாட்கள் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்தது.
துக்ளக் அலிகான் கைது
இந்த விசாரணையில், துக்ளக் அலிகான் பல்வேறு போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தியது அம்பலமானது. அவரின் நண்பர்கள் 6 பேரும் என 7 பேராக போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் துக்ளக் அலிகான் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: போதைப்பொருள் விவகாரம்; சுந்தரி சீரியல் நடிகை மீனா கைது.!
நீதிமன்ற காவல்
இந்நிலையில், வரும் டிசம்பர் 18 வரையில், நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகான் உட்பட 7 பேரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார். இதனால் மன்சூர் கலிகானின் மகனுக்கு முதற்கட்டமாக 14 நாட்கள் சிறை உறுதியாகியுள்ளது.
இவர்களிடம் 2 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில், அம்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அதன்பேரில் நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!