அச்சோ.. தீயபழக்கத்தால் உயிரிழந்த கோவை குணா.. இறப்பிற்கு இதுதான் காரணம்..! உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்..!!
அச்சோ.. தீயபழக்கத்தால் உயிரிழந்த கோவை குணா.. இறப்பிற்கு இதுதான் காரணம..! உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்..!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய அசத்தப்போவது யாரு, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு உட்பட பல காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி கலைஞராக பலரையும் சிரிக்க வைத்தவர் கோவை குணா.
இவர் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவு சின்னத்திரை வட்டாரங்களை பெரும்சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் இவரின் மரணம் தொடர்பாக பிரபல நடிகர் மதன் பாபு தெரிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்த அவர் கூறுகையில், "கெட்ட பழக்கம் மனிதருக்கு அளவோடு இருக்க வேண்டும். இந்த கருத்தை நான் இப்போது சொல்லகூடாது. ஆனால் அவர் நல்வழிப்பட்டு இருந்தால் இந்த நேரம் திரைத்துறையில் மிகப்பெரிய ஜாம்பவானாக இருந்திருப்பார்.
ஆனால் அவரின் தீயபழக்கத்தால் திரைத்துறையில் வாய்ப்பை இழந்து இன்று உயிரையும் இழந்துவிட்டார்" என்று கூறியுள்ளார். இதன் மூலமாக டப்பிங் கலைஞரான கோவை குணா தனது தவறான பழக்கத்தால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.