அடேங்கப்பா.. கஸ்டடி படத்திற்காக நாகசைதன்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?? வெளிவந்த தகவல்!!
அடேங்கப்பா.. கஸ்டடி படத்திற்காக நாகசைதன்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?? வெளிவந்த தகவல்!!
தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் நாக சைதன்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கஸ்டடி. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். மேலும் இதில் ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.
கஸ்டடி திரைப்படத்தில் அரவிந்த் சாமி, ப்ரியாமணி, பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்த கஸ்டடி திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றுள்ளது.
மேலும் கஸ்டடி திரைப்படம் முதல் நாள் மட்டும் இந்தியளவில் ரூ.4 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கஸ்டடி படத்திற்காக நடிகர் நாக சைதன்யா வாங்கிய சம்பளம் வாங்கிய குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் கஸ்டடி படத்திற்காக ரூபாய் 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.