அடஅட.. வேற லெவல்! அமெரிக்காவில் செட்டிலான நடிகர் நெப்போலியன்! அங்கு என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா!! வைரல் வீடியோ!!
அடஅட.. வேற லெவல்! அமெரிக்காவில் செட்டிலான நடிகர் நெப்போலியன் அங்கு என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா!! வைரல் வீடியோ!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நெப்போலியன். இவர் புதுநெல்லு புதுநாத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் ஹீரோ, வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்கள் என தமிழில் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
மேலும் நடிகர் நெப்போலியன் தமிழ் மட்டுமின்றி ஹாலிவுட் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அரசியலிலும் களமிறங்கி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். நடிகர் நெப்போலியனின் மனைவி ஜெயசுதா. இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரு மகன்கள் உள்ளனர். நடிகர் நெப்போலியன் தற்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகியுள்ளார்.
அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் வசித்துவரும் அவர் அங்கு தனது சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறாராம். மேலும் அவர் தனது நிலத்திலிருந்து எடுத்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் எம்ஜிஆரின் விவசாயி பாடலை பாடி, தான் ஒரு அமெரிக்கன் விவசாயி என்று கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.