நடிகர் நெப்போலியனின் அமெரிக்கா வீட்டை பார்த்துள்ளீர்களா... அடேங்கப்பா இது வீடா இல்ல பேலஸா... புகைப்படம் இதோ!!
நடிகர் நெப்போலியனின் அமெரிக்கா வீட்டை பார்த்துள்ளீர்களா... அடேங்கப்பா இது வீடா இல்ல பேலஸா... புகைப்படம் இதோ!!
தமிழ் சினிமாவில் புதுநெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். அவரின் முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார். அதனை தொடர்ந்து வில்லன், ஹீரோ என 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். பின்னர் அரசியலில் கால்பதித்த நெப்போலியன் அமைச்சராக இருந்தார். பின்னர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.
சமீபத்தில் கூட நடிகர் நெப்போலியன் அமெரிக்கா சொந்தமாக நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்து வருவதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் தற்போது அவரின் அமெரிக்கா வீட்டின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இது வீடா அல்லது பேலஸா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.