அஸ்வந்த் - பிரதீப் ரங்கநாதனின் கூட்டணியில் உருவாகும் புதிய படம்; அசத்தல் அறிவிப்பு இதோ.!
அஸ்வந்த் - பிரதீப் ரங்கநாதனின் கூட்டணியில் உருவாகும் புதிய படம்; அசத்தல் அறிவிப்பு இதோ.!
கோமாளி படத்தின் மூலமாக திரைப்பட இயக்குனராக அறிமுகமாகி, லவ் டுடே படத்தில் தானே நாயகனாக நடித்து பிரபலமடைந்த நட்சத்திரம் பிரதீப் ரங்கநாதன்.
தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எடுக்கப்பட்டு வரும் படத்தில் நடித்து வருகிறார். இவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது.
ஏனெனில் கோமாளி திரைப்படத்தில் பல 90 கிட்ஸ்களின் மனதை வென்றவர், லவ் டுடேவில் 2 கே கிட்ஸ்களை பிடித்துவிட்டார். இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் ஏஜிஎஸ் ப்ரொடக்சன்ஸ் தயாரிக்கும் படத்தில் அடுத்தபடியாக நடிக்கிறார். அப்படத்தை அஸ்வந்த் இயக்குகிறார். படத்தின் தலைப்பு உட்பட பிற அறிவிப்புகள் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.
இயக்குனர் அஸ்வந்த் கடந்த 2020 ல் வெளியான ஓ மை கடவுளே படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமும் வெற்றியை அடைந்தது.