வலியால் துடிதுடித்த அஜித்..! அஜித் பற்றிய பல நெகிழ்ச்சியான தகவல்களை கூறிய நடிகர் ராஜ்கிரண்.! வைரல் வீடியோ.
Actor rajkiran talks about ajith video goes viral
இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். சாதாரண பைக் மெக்கானிக்காக இருந்த இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் இன்று தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்தில் உள்ளார். இவருக்கென கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் நாளை தனது 49 வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார் தல அஜித். இதனை முன்னிட்டு இவரது ரசிகர்கள் அஜித் பற்றிய பல நெகிழ்ச்சியான தகவல்களையும், வீடியோக்களையும் தேடி கண்டுபிடித்து வைரலாக்கிவருகின்றனர். அந்த வகையில் நடிகர் ராஜ்கிரண் அவர்கள் தல அஜித் பற்றி நெகிழ்ந்துபேசிய வீடியோ ஓன்று தற்போது வைரலாகிவருகிறது.
அந்த வீடியயோவில், தான் அஜித்துடன் ஒருபடத்தில் நடித்தபோது இடைவெளியில் கூட அஜித் அமராமல் நடந்துகொண்டே இருப்பார், முதலில் அதற்கான காரணம் எனக்கு புரியவில்லை. பின்னர்தான் அவர் வலியால் அங்கும் இங்கும் நடக்கிறார் என தெரிந்தது. அவரிடம் சென்று ஓய்வு எடுத்துக்கொள்ளவேண்டியதுதானே என கேட்டேன்.
அதற்கு அவர், நீங்கள் என் கூடவே இருப்பதால் உங்களுக்கு என் நிலைமை புரிகிறது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் சென்னையில் இருப்பதால் அவரிடம் எப்படி நான் கேட்க முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த தகவல் தயாரிப்பாளருக்கு தெரிந்தால் என்னை இரண்டு நாள் கூட ஓய்வு எடுக்க சொல்லிருப்பார். ஆனால் என்னால் முடியும் பார்த்து கொள்ளலாம் என அஜித் கூறியதை கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாக நடிகர் ராஜ்கிரண் கூறியுள்ளார்.