கரக்காட்டக்காரன் படம் புகழ் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி! மருத்துவமனையில் அனுமதி!
actor ramarajan affected by corona
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் களத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா உறுதியாகி வந்தது. கொரோனா தொற்றால் சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். லேசான அறிகுறியுடன் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக-வின் பேச்சாளராக பொறுப்பு வகித்தார். 1998ல் திருச்செந்தூர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.