கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நடிகர் ராமராஜன் செய்த முதல் காரியம்! நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!
Actor ramarajan thank all people who pray for him
நடிகர் ராமராஜன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பிரார்த்தனைகள் மேற்கொண்டனர். இந்நிலையில் உடல் நலம் குணமடைந்து வீடு திரும்பிய அவர்நன்றி தெரிவித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், சில நாட்களுக்கு முன்பு கொரோனா தாக்கம் இருக்குமோ என்ற அய்யப்பாடு இருந்ததால் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரிந்தனர். எனக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர்.
அங்கு அனைவருக்கும் உயர்தர சிகிச்சை கிடைக்கிறது. இதற்காக மாண்புமிகு முதல்வர் எடப்பாடி அவர்களுக்கும், துணை முதல்வர் ஒ.பி.எஸ் அவர்களுக்கும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் எனக்காக பிரார்த்தனை செய்து என் மீது அக்கறை கொண்டு தொலைபேசியிலும், நேரிலும் நலம் விசாரித்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சக நடிகர் நடிகைகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் என் ரசிகபெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.