×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மறைந்த நடிகர் ரித்தீஷுக்கு இவ்வளோ சின்ன வயது குழந்தைகளா? புகைப்படம்!

Actor Rithish wife and kids photos

Advertisement

பிரபல நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் திடீர் மாரடைப்பால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 46. சின்னப்புள்ள,  காணல் நீர், நாயகன், பெண் சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியான LKG படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரித்தீஷ்.

சினிமா பிரபலங்கள், நலிவடைந்த கலைஞர்கள், ஏழை மக்கள் என பலருக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார் ரித்தீஷ். இந்நிலையில் இவரது மறைவு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரித்தீஷின் கடந்தகால வாழ்க்கையை பற்றி பார்த்தோமேயானால், ஸ்ரீலங்காவில் 1973 இல் பிறந்த இவர் 1976 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளார். இவரது தந்தை விவசாயம் சார்ந்த துறையில் பணியாற்றியுள்ளார். இவரது தாயார் இல்லத்தரசியாக இருந்துள்ளார். நடிகர் ரிதீஸுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். சாந்தி மற்றும் மணி.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதீஸ்வரி என்ற பெண்ணை ரித்தீஷ் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு அழகான ஆண் குழந்தைகள் உள்ளது. ரித்தீஷ் சிவில் இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ முடித்துள்ளார். ஒருசில வழக்குகளுக்குகாக சிறைக்கும் சென்றுள்ளார் ரித்தீஷ். இந்நிலையில் ஏப்ரல் 13 அன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rithish passed away #jk rithish #JK Rithish Wife and Kids
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story