பிரேம்ஜிக்கு மட்டும்தான் உங்க படத்தில் வாய்ப்பா..வெங்கட் பிரபுவிடம் கேள்வி கேட்ட நடிகர் சதீஷ்.?
பிரேம்ஜிக்கு மட்டும்தான் உங்க படத்தில் வாய்ப்பா..வெங்கட் பிரபுவிடம் கேள்வி கேட்ட நடிகர் சதீஷ்.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவர் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தது தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியுள்ளார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்திற்கு பின்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும்.
இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷ் வெங்கட் பிரபுவிடம் தளபதி 68 படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டிருக்கிறார். மேலும், "பிரேம்ஜிக்கு மட்டும்தான் உங்க படத்தில் வாய்ப்பு கொடுப்பீங்களா? உங்க தம்பியாக நினைத்து எனக்கும் வாய்ப்பு கொடுங்க" என்று கேட்டுள்ளார். இச்செய்தி இணையத்தில் பரவி வருகிறது.