காதல் திருமணம்.! நடிகை சங்கீதாவை கரம்பிடித்த ரெடின் கிங்ஸ்லி.! நடிகர் சதீஷ் என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
காதல் திருமணம்.! நடிகை சங்கீதாவை கரம்பிடித்த ரெடின் கிங்ஸ்லி.! நடிகர் சதீஷ் என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி வளர்த்து வரும் காமெடி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் யோகிபாபு நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து அவர் டாக்டர் அண்ணாத்த, பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் தனது எதார்த்தமான நடிப்பால், வித்தியாசமான பேச்சால் பெருமளவில் பிரபலமானார். அவர் நேற்று சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இதுகுறித்து நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான சதீஷ் மாஸ்டர் கூறுகையில், நானும், கிங்ஸ்லீயும் நீண்டகால நண்பர்கள்.அவர் திருமணத்தின் மீது பெரியளவில் நம்பிக்கை எதுவும் இல்லாமல் இருந்தார். நாங்கள் கூட இப்படியே இருந்தால் நேரடியாக அறுபதாம் திருமணம்தான் செய்ய வேண்டும் என பலமுறை கிண்டல் செய்துள்ளோம். பின்னர் சங்கீதாவுடன் காதல் ஏற்பட்டு தற்போது அவர்களது திருமணம் மைசூரில் நடைபெற்றுள்ளது.
அந்த திருமணத்திற்கு நானும் கண்டிப்பாக சென்றிருக்க வேண்டும். ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் என்னால் அங்கு செல்ல முடியவில்லை எனக் கூறியுள்ளார்.