"பார்த்தீபன் என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது அதுதான்" - மனம் திறந்த இயக்குனர் & நடிகர் செல்வராகவன் நெகிழ்ச்சி தகவல்..!
பார்த்தீபன் என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது அதுதான் - மனம் திறந்த இயக்குனர் & நடிகர் செல்வராகவன் நெகிழ்ச்சி தகவல்..!
கடந்த 2010 ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில், நடிகர் கார்த்திக், ஆண்ட்ரியா, பார்த்திபன், ரீமாசென், அபிநயா உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். கடல் கடந்து சென்ற சோழரின் வாழ்வியல் மற்றும் அவர்களை தேடிச்சென்ற நபர்களுக்கு நடக்கும் மர்மமங்கள் மற்றும் அதற்கான விடை தொடர்பான கதையம்சம் பலராலும் கவனிக்கப்பட்டது.
காலம் கடந்து போற்றப்பட்ட படைப்பு:
படம் வெளியானபோது அது எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை எனினும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பின்னர் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதனால் தான் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படத்தை பலரும் கொண்டாடித்தீர்த்தனர். இன்றளவில் பாகுபலி, கேஜிஎப் என பல படங்கள் வந்தாலும், ஆயிரத்தில் ஒருவனின் படத்திற்கு ஈடு இல்லை என்றும் ரசிகர்கள் போற்றி வருகின்றனர்.
பார்த்தீபன் குறித்து செல்வராகவன்:
இந்நிலையில், நடிகர் மற்றும் இயக்குனர் செல்வராகவன் பார்த்தீபன் குறித்து பேசுகையில், "ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் துரோகம் அடைந்தாலும், நம்பிக்கைக்குரிய ஒருவனை பெற்று துக்கம், மகிழ்ச்சி, அவநம்பிக்கை, கழிவிரக்கம், அரசனுக்கான கம்பீரம், கண்ணீர், புன்னகை ஆகியவற்றுடன் அவர் ஆடும் ஆட்டமே அற்புதம். அப்படத்தில் நூற்றுக்கணகானான காட்சிகள் இருப்பினும், பார்த்தீபன் என்றால் அந்த காட்சிகள் மட்டுமே நினைவுக்கு வரும்" என கூறினார்.