பிரபல வில்லன் நடிகர் செந்தாமரையின் மனைவி இந்த பிரபல சீரியல் நடிகையா.? யார் தெரியுமா அது.? புகைப்படம் உள்ளே.!
Actor senthamarai wife photo
தமிழ்த்திரையுலகில் கவனிக்க தக்க வில்லன் நடிகர்களில் ஒருவர் செந்தாமரை. ரஜினிக்கு வில்லனாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் செந்தாமரை. மூன்றுமுகம் படத்தில் வில்லனாக இவரின் நடிப்பை பார்த்த பலரும் பிரமித்துபோனார்கள். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு இவரின் நடிப்பும் ஒரு காரணம் என்றே கூறலாம்.
வில்லன் காதாபாத்திரம் மட்டும் இல்லாமல் ரஜினியின் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் கலக்கியவர். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் கௌசல்யா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
அந்த கௌசல்யா யார் என்பது பலருக்கும் தெரியாது. அவர் வேறு யாரும் இல்லை. பூவே பூச்சூடவா தொடரில் யுவராணிக்கு தூபம் போட்டு கொழுத்திப் போடும் பாட்டி பாத்திரத்தில் வரும் அவர்தான் நடிகர் செந்தாமரையின் மனைவி கெளசல்யா. தற்போது 72 வயதாகும் இவர் சீரியலில் அம்மா, வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.