#Breaking: நடிகர் ஷாருக்கானுக்கு திடீர் உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி?.!
#Breaking: நடிகர் ஷாருக்கானுக்கு திடீர் உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி?.!
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராகவும், இந்திய சினிமாவின் கிங் கான் எனவும் வருணிக்கப்படுவர் ஷாருக்கான். இவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்து வருகிறார்.
நடிகர் & தயாரிப்பாளர், கொல்கத்தா அணியின் உரிமையாளர்
ஐபிஎல் 2024 தொடரில் கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தேர்வாகி உள்ளது. இதனால் அணியின் உரிமையாளர் என்ற வகையில், கடந்த சில நாட்களாக போட்டி நடைபெறும் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் அவர் வீரர்களுடன் முகாமிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: கற்றது தமிழ் படத்தால் நஷ்டமானாலும், அந்த விஷயம் திருப்தி தந்தது - மனம் திறந்த நடிகர் கருணாஸ்.!
இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் அகமதாபாத் நகரில் உள்ள கேடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வெப்பநிலை ஒத்துக்கொள்ளாததன் காரணமாக, நீரிழப்பால் அவதிப்பட்டு இருக்கிறார். கடும் வெப்ப அலை காரணமாக அவர் நீரிழப்பு பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி?
இதனால் அவர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஐபிஎல் தொடருக்காக ஷாருக் தனது மனைவி சுஹான், மகன் அப்ராம், மேலாளர் பூஜா டைலானி ஆகியோருடன் கிரிக்கெட் மைதானத்திற்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் தற்போது வரை ஷாருக் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை எனினும், சமூக வலைத்தளத்தில் ஷாருக்கானின் ரசிகர்கள் உடல்நலம் தேறி சென்னையில் நடக்கும் இறுதிப்போட்டிக்கு அவர் வருகை தரவேண்டும் என பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: சசிகுமாரின் கருடன் பட டிரைலர் இன்று வெளியீடு; படக்குழு அறிவிப்பு.!