தலைசுற்ற வைக்கும் நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு! அடேங்கப்பா! இத்தனை ஆயிரம் கோடியா?
Actor shahrukh khan latest net worth value revealed
இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருகான். இதுவரை 80 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் நடிகர் ஷாருகான். தீவானா என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஷாருகான். அதில் இருந்து இன்றுவரை பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் நடிகர் ஷாருகான். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
நடிகர் ஷாருக்கான் நவம்பர் 2, 1965 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் பிறந்தவர். இவரது தந்தை பெயர் முகமத் கான். தனது குழந்தை பருவம் முழுவதையும் டெல்லியில் உள்ள ராஜேந்திர நகரில்தான் கழித்தார் நடிகர் ஷாருகான்.பின்னர் டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்த ஷாருக்கான் டெல்லியில் உள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் தனது பட்ட படிப்பினை முடித்துள்ளார்.
பின்னர் நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் டெல்லியில் உள்ள ஒரு இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் மாஸ் மீடியா படம் பெற்றார். பின்னர் 1991 ஆம் ஆண்டு மும்பைக்கு குடிபெயர்ந்தார் ஷாருகான். பலவிதமான கடின முயற்சிகளுக்கு பிறகு 1992 ஆம் ஆண்டு தீவானா என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். பின்னர் அவரது படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெட்ரா நிலையில் இன்று இந்திய சினிமாவின் அடையாளமாக உருவெடுத்துள்ளார் நடிகர் ஷாருகான்.
சினிமாவை போன்றே தொழிலிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார் நடிகர் ஷாருகான். சினிமா, விளம்பர படங்கள், தொழில் என அனைத்திலும் பல ஆயிரம் கோடி வருமானத்தை பெறுகிறார் நடிகர் ஷாருகான். டிஷ் டிவி நிறுவனம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என தனது நிறுவனங்களை விரிவுபடுத்தியுள்ளார் நடிகர் ஷாருக்கான்.
இந்நிலையில் நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இவரது சொத்து மதிப்பு $600 மில்லியன் ஆகும். அதாவது இந்திய மதிப்புப்படி இவரது சொத்து மதிப்பு சுமார் 4022,00,70,000 கோடி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.