குஷ்புவுடன் கும்மாளம் அடித்த நடிகர் சித்தார்த்; வெளியான புகைப்படத்தால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
actor sidarth playing with kushboo
அவ்வப்போது நடைபெறும் சமூக பிரச்சனைகளில் தலையிட்டு தன்னுடைய கருத்துக்களை ஆணித்தரமாக பதிவு செய்பவர் நடிகர் சித்தார்த். தற்போது மிகவும் பெரிய சர்ச்சையாக கிளம்பியுள்ள #MeeToo குழுவிற்கு ஆதரவாக சித்தார்த் பேசியுள்ளார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் நடிகை குஷ்புவை கட்டி அணைத்து அவரது வாயில் கை வைத்து மூடும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த புகைப்படத்தை பற்றி விமர்சித்துள்ள ரஹீம் என்ற நபர் "இப்போது இதை பார்க்கும்போது மட்டும் #MeeToo மாதிரி இல்லையா என கேள்வி கேட்டுள்ளார். பெண்களை தொடவே கூடாது என்று சொன்ன உத்தமர் சித்தார்த் அவர்களே நீங்கள் செய்யும் இந்த காரியம் மற்றும் #MeeToo இல்லையா எனக் கேட்டுள்ளார். இப்படி கூத்தடிக்கும் நீங்கள் வைரமுத்துவை பற்றி மட்டும் வாய்கிழிய பேசுவது ஏன். வைரமுத்து இப்படியெல்லாம் கூத்தடிக்க மாட்டார் என பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள நடிகை குஷ்பூ "அக்கா-தம்பி, நண்பர்கள் என்ற வார்த்தைகளை நீங்கள் கேள்விப்பட்டதே இல்லையே. அப்படி என்றால் முதலில் அந்த வார்த்தைகளை தெரிந்து கொண்டு வாங்க தம்பி" என்று பதிவிட்டுள்ளார்.