நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி காதலா...? கிசு கிசுக்கும் கோலிவுட் வட்டாரம்...! கலாய்த்து வரும் நெட்டிசன்கள்...!?
நடிகர் சித்தார்த் மற்றும் அதித்தி காதலா...? கிசு கிசுக்கும் கோலிவுட் வட்டாரம்...! கலாய்த்து வரும் நெட்டிசன்கள்...!?
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகரான சித்தார்த், முதன்முதலில் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். முதல் படமே இவருக்கு பெரிய வெற்றியை பெற்று தந்தது. சாக்லேட் பாய் தோற்றம் கொண்ட இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் தான் அதிகம்.
மேலும், இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதாநாயகிகளுடன் காதலில் இருப்பதாக அவ்வப்போது சினிமா வட்டாரங்கள் கிசு கிசுக்கும். இதன்படி பாய்ஸ் படத்தில் ஜெனிலியாவை டேட் செய்வதாகவும் கிசுகிசு வெளியானது. இதன் பின்பு சமந்தாவை காதலிக்கிறார் என்ற தகவல் வெளிவந்த நிலையில் திடீரென்று இவருக்கும், சமந்தாவிற்கும் பிரிவு ஏற்பட்டது.
இதனையடுத்து, சமந்தா நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சித்தார்த், சமந்தாவின் திருமணத்தின் போது டுவிட்டரில் பதிவு செய்த ட்விட், சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இத்தகைய நிலையில் தற்போது சித்தார்த், அதிதி ராவ்வை டேட் செய்வதாக தெரிய வந்திருக்கிறது. அதிதியின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு முதல் ஆளாக முந்திக்கொண்டு கமெண்ட் போடுகிறாராம். அதிதியின் பிறந்த நாளன்று 'பிரின்சஸ் ஆப் மை ஹார்ட்' என்று பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார். இவர்கள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்த நெட்டிசன்கள், சித்தார்த் காதலிக்கும் அனைவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். அதிதிக்கு எப்போது திருமணம் என்று கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.