அடேங்கப்பா... நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடிகளா...
அடேங்கப்பா... நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடிகளா...
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது அசத்தலாக நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் சிம்பு. பின் ஹீரோவாக அவதாரமெடுத்த அவர் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
ஆனால் இடையில் சில காலங்கள் சிம்புநடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வியையே தழுவியது. பின் தீராத கடின உடற்பயிற்சியால் உடல் எடையை குறைத்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது நடிகர் சிம்பு பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்புவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் சிம்புக்கு தனியாகவே சொகுசு கார், பங்களா என 119 கோடி ரூபாய் வரை சொத்து மதிப்பு இருப்பதாக தகவல் பரவி வருகிறது.