கோவம் கொண்ட கலைஞர்! கன்னத்தில் பளார் அரை வாங்கிய நடிகர் சிம்பு! ஒரு உணர்ச்சி பூர்வமான நிகழ்வு!
Actor simbus open talks about dr kalingar karunanidhi
நடிகர் சிம்பு திமுக தலைவர் கருணாநிதியிடம் கன்னத்தில் பளார் என அறை வாங்கிய சம்பவத்தைவெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
சிறுநீர் தொற்று மற்றும் வயது முதிர்வின் காரணமாக உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி கடந்த 7ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை காலமானார் .
இந்நிலையில், நடிகர் சிம்பு பிரபல வார இதழ் ஒன்றில் கருணாநிதி குறித்து தனது கருத்துக்களை கூறியிருந்தார்.அப்பொழுது அவர்
கலைஞர் கருணாநிதி தாத்தாவுடன் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. ஒரு வேலையை சரியாக செய்ய ,எனக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால் அவரிடம்தான் சந்தேகம் கேட்பேன்.
மேலும் நான் வல்லவன் படம் இயக்கிக் கொண்டிருந்த போது அந்த படத்தை கட்டாயம் தனக்கு போட்டு காட்ட வேண்டும் என கலைஞர் என்னிடம் கூறியிருந்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் என்னால் அந்த படத்தை அவரிடம் போட்டு காட்ட முடியாமல் போய்விட்டது.
அதன்பின்,சிறிது நாட்களுக்கு பிறகு அவரின் குடும்ப விழா ஒன்றில் நான் கலந்து கொண்டேன். அப்போது, அவரை பார்க்க சென்ற என்னைக் கண்டதும் பளார் என என கன்னத்தில் ஒரு அறை விட்டார்.
மேலும் எனக்கு ஏன் வல்லவன் படத்தை போட்டுக்காட்டவில்லை என கோபித்துக் கொண்டார். மேலும் அடுத்த படத்தை போட்டு காட்டவில்லை எனில் இன்னொரு கன்னத்திலும் அறை விழும்” என செல்லமாக கோபம் கொண்டு உரிமையாக பேசினார் ” என சிம்பு வருத்ததுடன் கூறினார்