சிவகார்த்திகேயன் மிஸ் செய்த அட்லியின் மெகாஹிட் திரைப்படம்! எந்த படம் தெரியுமா?
Actor siva missed a chance to act in atlee direction

தமிழ் சினிமாவில் விஜய் அஜித்திற்கு அடுத்தபடியாக பேசப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது முயற்சியாலும், திறமையாலும் புகழின் உச்சத்திற்கு வந்துள்ளார் நடிகர் சிவா. பலக்குரல் கலைஞராக விஜய் தொலைக்காட்சியில் தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்த நடிகர் சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அங்கமாக மாறியுள்ளார்.
இன்று இளம் நடிகா்களில் விஜய்க்கு அடுத்தபடியாக சிறியவா்கள் முதல் பெரியவா்கள்வரை அனைவரும் விரும்பும் நடிகராக வளா்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளாா் சிவகாா்த்திகேயன்.
மெரினா திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தந்து வெள்ளித்திரை பயணத்தை ஆரம்பித்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சீமராஜாவாக வளர்ந்து நிக்கிறார். இவர் முதலில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில்தான் நடிக்க இருந்தாராம்.
ஆா்யா, மற்றும் ஜெய் நடித்து 2013-ம் ஆண்டு வெளியான மெகாஹிட் திரைப்படம் ராஜா-ராணி. கணவன் மனைவியின் கடந்த கால காதலை நினைவு கூறும் வகையில் கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் ரசிகா்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் ஆா்யா-நஸ்ரியா, ஜெய்-நயன்தாரா, சந்தானம், சத்யராஜ், சத்யன், மனோபாலா, ராஜேந்திரன், சிங்கமுத்து, சாமிநாதன் உட்பட பலா் நடித்திருந்தனா்.
இப்படத்தில் நடிகர் ஜெய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சிவகாா்த்திகேயன் அவா்கள்தானாம். ஆனால் ஒருசில காரணங்களால் பின்னா் இவருக்கு பதிலாக நடிகா் ஜெய் ஒப்பந்தம் செய்யபட்டாா்.
அதேபோல் இப்படத்தில் நடிகை நஸ்ரியா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவா் நடிகை ப்ரியா ஆனந்த அவா்கள்தானாம். ஆனால் கால்ஷீட் பிரச்சனைகளால் இவருக்கு பதிலாக நடிகை நஸ்ரியா அவா்கள் ஒப்பந்தம் செய்யபட்டாா்.