சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி: அயலான் படத்தின் இசை வெளியீடு விழா அறிவிப்பு.!
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி: அயலான் படத்தின் இசை வெளியீடு விழா அறிவிப்பு.!
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆர். ரவிக்குமார் இயக்கத்தில், கோட்டைப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான்.
இப்படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, இஷா, கருணாகரன், பானு பிரியா உட்பட பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் சிவகார்த்திகேயன் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கிறது. ஏ.ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.
அயலான் திரைப்படம் வேற்றுகிரகத்தில் இருந்து பூமிக்கு வந்த ஏலியனுடன், சிவகார்த்திகேயன் மற்றும் அவரின் நண்பர்கள் செய்யும் நகைச்சுவைகள், அதனைத்தொடர்ந்து ஏலியன் தனது தாயகத்திற்கு திரும்பினாரா? இடையில் எதிர்கொண்ட சவால்கள் என்ன? என்பது தொடர்பான கதையாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு தயாராகி வரும் அயலான் திரைப்படத்தின் இசை வெளியீடு விழா டிசம்பர் 26ம் தேதி நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை படத்தயாரிப்பு குழு உறுதி செய்துள்ளது.