#Breaking: வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.10 இலட்சம் நிதிஉதவி வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
#Breaking: வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.10 இலட்சம் நிதிஉதவி வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, வெள்ளித்திரையில் முக்கிய நாயகனாக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். 3 படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானவர், இன்று முக்கிய தமிழ் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
மனம் கொத்திப்பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், காக்கி சட்டை, ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், பிரின்ஸ் உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
தற்போது ரகுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படம் ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது. அதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, மேற்படி 2 படங்களில் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தற்போது சென்னை பெருவெள்ள பாதிப்பு பணிகளில் இருந்து மக்களை மீட்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அரசுக்கு மக்கள் நிதிஉதவி வழங்குமாறு தமிழ்நாடு முதல்வரும் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.10 இலட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.