அந்த மனசுதான் சார் கடவுள்.. நடிகர் சோனு சூட்டின் வாழ்க்கையில் விளக்கேற்றிய விஜயகாந்த்.. 24 ஆண்டுக்கு பின் தெரியவந்த உண்மை.!!
அந்த மனசுதான் சார் கடவுள்.. நடிகர் சோனு சூட்டின் வாழ்க்கையில் விளக்கேற்றிய விஜயகாந்த்.. 24 ஆண்டுக்கு பின் தெரியவந்த உண்மை.!!
கோலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம்வந்தவர் நடிகர் விஜயகாந்த். அந்த காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, மற்றும் கமலுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருந்ததோ, அதே அளவிற்கு விஜயகாந்திற்க்கும் ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், நடிகர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார்.
திரையில் மட்டுமின்றி தனது நிஜவாழ்க்கையிலும் இவரை பலர், ரியல் ஹீரோ என்றுதான் அழைப்பர். இவர் அதன்பின் நடிப்பிலிருந்து முற்றிலும் விலகி தேமுதிக தலைவராக பணியாற்றி வந்தார். விஜயகாந்துக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு கட்சி பணிகளில் ஈடுபடுவதை குறைத்து கொண்டார்.
இதனை தொடர்ந்து நேற்று விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தனது 71 வயதில் அவர் இயற்கை எய்தினார். அவரின் மரணத்திற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சோனுசூட் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயகாந்தின் மறைவுக்கு தனது உருக்கமான இரங்கலை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கள்ளழகர் திரைப்படம் எனது முதல் படம். விஜயகாந்த் சார் கொடுத்த பரிசு, அந்த படத்தில் நான் நடித்தது.
எனது பழைய புகைப்படம் ஒன்றை பார்த்த நடிகர் விஜயகாந்த் உடனடியாக என்னை அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார். அவருக்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன். நாங்கள் அனைவரும் உங்களை நேசிக்கிறோம்" என்று கூறியுள்ளார். முன்னணி வில்லன் நடிகராக தற்போது வலம் வரும் நடிகர் சோனுசூட் தனது திரை வாழ்க்கையை தொடங்கியது கள்ளழகர் படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.