10 வருடத்திற்கு முன்பு நடிகர் சூரி எப்படி இருந்துள்ளார் என்று பாருங்கள்! புகைப்படம்!
Actor soori 10 year challenge photo goes viral
வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் வரும் பரோட்டா காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் சூரி. இவரை பரோட்டா சூரி என்றுகூட பலர் அழைத்துவருகின்றனர். வடிவேலு இல்லாத தமிழ் சினிமாவை தனக்கான அடையாளமாக மாற்றிக்கொண்டார் நடிகர் சூரி.
விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முனனின் நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் பரோட்டா சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் பிரபலமாகி இருந்தாலும் இந்த படத்திற்கு முன்பே பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அதில் எதிலும் இவர் பிரபலமாகவில்லை.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் பரோட்டா சூரி. தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து நடித்துவருகிறார். இந்நிலையில் 10 Year Challenge என்ற ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. அதில் பிரபலங்களின் 10 வருடத்திற்கு முந்தைய புகைப்படமும், தற்போதுள்ள புகைப்படமும் வெளியிடப்படும்.
அந்தவகையில் நடிகர் சூரியின் பத்து வருடத்திற்கு முந்தைய புகைப்படமும், தற்போதைய புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதில் முற்றிலும் வித்தியாசமாக தோற்றமளிக்கிறார் நடிகர் சூரி.