ரசிகர்கள் சொன்ன அந்த வார்த்தை, கையெடுத்து கும்பிட்ட சூரி.! என்ன சொன்னார் தெரியுமா.?!
ரசிகர்கள் சொன்ன அந்த வார்த்தை, கையெடுத்து கும்பிட்ட சூரி.! என்ன சொன்னார் தெரியுமா.?!
விடுதலை 2
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் தான் விடுதலை 2 . இந்த திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திருச்சியில் இருக்கும் ஒரு தியேட்டரில் சூரி கலந்து கொண்டு படம் பார்த்துவிட்டு ரசிகர்களுடன் உரையாடி இருக்கிறார்.
அரசியல் பேசும் படம்
அப்போது அவர், "படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தவர்களுக்கு ஒரு வலி மிகுந்த உணர்வு இருக்கும். விடுதலை 2 திரைப்படம் கமர்சியல் படம் என்பதை தாண்டி தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் இதில் நிறைய இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இது கட்டாயம் பூர்த்தி செய்யும்.
இதையும் படிங்க: 'விடுதலை 2' படத்தில் ஹீரோவாக நடித்த சூரிக்கு இவ்வளவு தானா சம்பளம்.?!
விடுதலை 3 க்கு வாய்ப்பு
இந்த படத்திற்கு மக்கள் வரவேற்பு கொடுத்தால் அதன் பின் விடுதலை 3 படம் எடுப்பது பற்றி பார்க்கலாம். வாத்தியார் பற்றி விடுதலை 2 படத்தில் நிறைய விரிவாக சொல்லப்பட்டிருக்கும். இந்த படத்தில் நானும் இருப்பேன். இது அனைவரின் வாழ்விலும் நடந்த ஏதோ ஒரு விஷயத்துடன் கனெக்ட் ஆகும். அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடிப்பேன். நல்ல கதை அமைந்தால் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிப்பதில் எந்த பிரச்சனையும் எனக்கு இல்லை." என்று தெரிவித்துள்ளார்.
உங்களில் ஒருவன்
அப்போது அங்கிருந்த அவரது ரசிகர்கள், 'வருங்கால சூப்பர் ஸ்டார் சூரி, அடுத்த தளபதி சூரி' என்று கோஷம் போட்டனர். இதை பார்த்து, பதறிப்போன சூரி, "அய்யய்யோ அதெல்லாம் வேணாம். எனக்கு உங்களில் ஒருவனாக இப்படி இருப்பதுதான் பிடிக்கும்." என்று கையெடுத்து கும்பிட்டார்.
இதையும் படிங்க: 'விடுதலை 2' படத்தில் ஹீரோவாக நடித்த சூரிக்கு இவ்வளவு தானா சம்பளம்.?!