தெறி படத்தில் என் மகள் தான் முதலில் நடிக்கவிருந்தார்! நைனிகா இல்லை.. உண்மையை உடைத்த சின்னத்திரை நடிகர்!
Actor sree daughter was the first choice for theri nainika character
விஜய், சமந்தா நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது தெறி திரைப்படம். இந்த படத்தில் விஜய்க்கு மகளாக பிரபல நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். எதார்த்தமான நடிப்பு, அழகான எக்ஸ்பிரஷன் மூலம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார் பேபி நைனிகா.
இந்நிலையில் தெறி படத்தில் நைனிகாவிற்கு பதிலாக எனது மகள்தான் நடிக்க இருந்ததாகவும், முதலில் என் மகளைத்தான் நைனிகா கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க அட்லீ கேட்டதாகவும், ஆனால், தான் தான் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் பிரபல சின்னத்திரை நடிகரும், விஜய்யின் நண்பருமான ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் யாரடி நீ மோகினி தொடரில் ஹீரோவாக நடித்துவருகிறார். மேலும், தெறி படத்திலும் இவர் போலீஸ் வேடத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.