அடக்கடவுளே.. சூர்யாவின் பிறந்தநாளில் துடிதுடித்து இறந்த ரசிகர்கள்; பாலபிஷேகம் செய்தவர்களுக்கு பால் ஊற்றிய மின்சாரம்.!!
டோலிவுட் நடிகர் சூர்யாவின் பேனருக்கு பால் ஊற்றிய ரசிகர்களுக்கு, மின்சாரம் ஊற்றிய இறுதி பால்; 2 கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி.!
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாலநாடு மாவட்டம், மொபுலவரிபலம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நக்கா வெங்கடேஷ், போளுரி சாய். இ
இவர்கள் இருவரும் நரசரோபெட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவின் தீவிர ரசிகர்களாக இவர்கள் இருந்துள்ளனர்.
23ம் தேதியான நேற்று சூர்யாவின் பிறந்தநாள் ரசிகர்கள் பலராலும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இருவரும் தங்களின் மனதை வென்ற நாயகருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பேனர் வைத்துள்ளனர்.
மேலும் ஆர்வக்கோளாறு காரணமாக இளைஞர்கள் பேனரின் மீது ஏறி பாலபிஷேகம் செய்ய முயற்சித்துள்ளனர். அப்போது, மின்சாரம் தாக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.